புண்ணிய பூமி கர்ம பூமி என்று அழைக்கப்படும் பாரதத்தின் ஒரு பகுதியான காஷ்மீரில் உள்ள ஹிந்துக்கள் மீது 1990ம் வருடம் ஜிகாதி என்ற பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை சம்பவங்கள் பற்றிய நிகழ்ச்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காஷ்மீர் பைல் என்ற திரைப்படத்தால் போலி மதசார்பின்மை வாதிகள் முகத்திரை கிழிந்தது. விவேக் அக்னிஹோத்ரி என்பவரால் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இதுநாள்வரை மூடி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொண்டு வந்து விட்டது. பாதிக்கப்பட்ட இந்துக்களின் செய்தி தொலைக்காட்சி விவாதத்தில் கூட வந்துவிட்டன .
பயங்கரவாதிகள் எளிய முறையில் புரிந்து கொண்டு கொடூர செயலை அரங்கேற்றும் வகையில் மதம் மாறு, விட்டு ஓடு,அல்லது சாவு, என்ற கோஷங்கள் ஒவ்வொரு மசூதியிலிருந்து ஒலிப்பெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது.இதன் பிறகு கூட்டம் கூட்டமாக இஸ்லாமிய மக்கள் திரண்டு ஸ்ரீநகர் நகரில் உள்ள ஹிந்துக்கள் வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தினர். கண்ணில்பட்ட இந்துக்களை கொன்று குவித்தனர் .இப்படி ஒரு இனப்படுகொலை அரங்கேற்றியது 1985 இல் இருந்து 90 வரை. இந்த சம்பவங்களிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சில இந்துக்கள் ஜம்முவில் டெல்லியிலும் வீதிகளில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அன்றைய காஷ்மீர் அரசின் முதல்வர் பருக் அப்துல்லா இது சம்பந்தமான விஷயங்களில் தலையிடவில்லை. அன்று மத்திய அரசாங்கத்திற்கு கூட காஷ்மீர் பண்டிட்டுகள் அலறல் காதில் விழவில்லை.மதச்சார்பின்மை பற்றி மேடையில் பேசிவரும் காஷ்மீர் முதல்வர் பாருக்அப்துல்லா அவர் மகன் உமர் அப்துல்லா அவர்கள் இந்தப் படத்தை பார்த்த பிறகு ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர் .இது ஒரு சார்பாக உள்ளது என்றும் கூறியுள்ளனர் .மேலும் இது பழைய புண்ணை கிளறி வன்முறைக்கு வழி வகுக்கக் கூடியது என்று கருத்து கூறியுள்ளனர்.
பட்ட காயங்கள் என்றும் ஆறுவதில்லை. காஷ்மீர் பண்டிட்டுகள் தங்களுடைய பூர்வீகமான இடத்திற்கு செல்வதற்கு உலக நாடுகள் கூட எதுவும் செய்யவில்லை .ஆகவே இந்த காயங்கள் உடலில் இருந்து மறைந்தாலும் தீர்வுக்காக இன்றும் கனன்று கொண்டிருக்கிறது.
இது வகுப்புவாதத்தை தூண்டுவதாக கூறுவதும் ஏற்கத்தக்கதல்ல. லட்சக்கணக்கான குடிமக்கள் தங்கள் சொந்தத் தாய் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப் பட்ட உண்மை மறைத்து வைக்கப்பட்டுள்ளது. 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை கூட இன்றும் பேசப்பட்டு வருகிறது. காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்கு இந்த சம்பவத்தில் ஈடுபாடு இல்லை என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது .முஸ்லிம் இளைஞர்கள் மதம்மாறு, ஓடிவிடு ,அல்லது சாவு, என்ற எழுப்பிய கோஷங்கள் எழுப்பியது மறைக்கமுடியாதது.. ஸ்டீவன் ஸ்பீல்பர்க் என்பவர் 1995ம் வருடம் யூதர்கள் ஜெர்மானிய கிறிஸ்தவர்களால் இனப்படுகொலை செய்ததை படமாக எடுத்தனர். அந்த படத்தை பார்த்த யாரும் இது ஒரு தலைப்பட்சமாக என்று கூறவில்லை .மேலும் அமெரிக்காவில் உள்ள காங்கிரஸ் பாராளுமன்றம் 7 விருதுகளை இந்த படத்திற்கு கொடுத்துள்ளது. காஷ்மீரில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் வேரோடு அழிக்கப்பட்ட இந்த உண்மை சம்பவம் நாடு முழுவதிலும் சிறு சிறு குழுக்களாக உள்ள போலி மதச்சார்பின்மை வாதிகளுக்கு உண்மையை புரியவைத்திருக்கும். நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் சில முஸ்லிம்கள் முஸ்லிம் நாடு என்று கேட்ட நேரத்தில் பெரும்பாலான இந்த மதச்சார்பின்மை வாதிகள் செக்யூலர் நாடு கேட்டனர் .70 வருடங்களாக புரியாமல் இருந்த உண்மை இப்போது அவர்களுக்கு புரிந்திருக்கும். இந்தப் படம் அணையை உடைத்துக் கொண்டு வெள்ளம் வருவது போல அனைத்து உண்மைகளையும் வெளிக் கொண்டு வந்து விட்டது என்பது நிதர்சனமான உண்மை.
– சந்திரசேகர்ஜி
balasekaran66@gmail.com