ஜம்மு – காஷ்மீரில், 1990 -களில் தான் பயங்கரவாதம் மிகவும் அதிகரித்தது. ஹிந்துக்களை விரட்டி விட்ட பயங்கரவாதிகள், முஸ்லிம்களையும் தாக்கினர். அப்போது ஆர்.எஸ்.எஸ்., சார்பில், ‘காஷ்மீரை பாதுகாப்போம்’ என்ற பெயரில் தேசிய அளவில் மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
பயங்கரவாதிகளால் தாக்குதலுக்குள்ளான ஹிந்துகளுக்கு மட்டுமின்றி, முஸ்லிம்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் உதவிகள் செய்யப்பட்டன. ஆர்.எஸ்.எஸ்., மீது தொடர்ந்து பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.அதை ஆர்.எஸ்.எஸ்., உடைத்தெறிந்து, நாட்டு நலனுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றிலும் ஆர்.எஸ்.எஸ்., பணியாற்றி, அங்குள்ள பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது. நாட்டின் மக்கள் தொகையில், 50 சதவீதத்துக்கும் அதிகமானோரை, பல்வேறு வழிகளில் ஆர்.எஸ்.எஸ்., தொடர்பு கொண்டுள்ளது.