காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: போலீஸ் அதிகாரி பலி

0
312

ஜம்மு – காஷ்மீரின் புட்காம் மாவட்டம் சாட்பக்கில் போலீஸ் அதிகாரி இஷ்பாக் அகமது வீட்டை, நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் சுற்றி வளைத்தனர். அவர்கள் துப்பாக்கி யால் சுட்டதில் இஷ்பாக் அகமது, அவரது சகோதரர் உமர் ஜான் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இவர்களில் சிகிச்சை பலனின்றி இஷ்பாக் அகமது பலியானார். நேற்று காலை அவரது சகோதரரும் இறந்தார்.
தாக்குதல் நடந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு, ஜம்மு – காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கண்டனம் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here