ஸ்ரீராமரின் சமுதாயம் யாரையும் புறக்கணிக்காது

0
365

டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷனில் ‘பிரவாசி தேஷோ மே ராம்’ ற இரண்டு நாள் கருத்தரங்கில் என்கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “1947ல் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து பாரதம் சுதந்திரம் பெற்ற காலகட்டம் எனக்கு நினைவிருக்கிறது. சுதந்திரம் பெற காரணமாக இருந்த சர்தார் வல்லபாய் படேலுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்களாக உள்ளோம். நமது நாட்டுக்கு பட்டேல் ஆற்றிய பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நம் நாட்டில் சில நாத்திகர்கள் இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை உடையவர்கள்தான். இவர்கள் அனைவரும் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும். நம் நாட்டு இளைஞர்கள் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளில் இருந்து உத்வேகம் பெற வேண்டும். விவேகானந்தர் ஒருமுறை “அறிவு என்பது வேற்றுமைக்கு மத்தியில் ஒற்றுமை காணும் முயற்சியே தவிர வேறில்லை. ராமர் நமது பாரதக் கலாசாரத்தின் பிரதிநிதி. ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் நாயகனாக திகழ்வதே ராமரின் தனித்துவத்தின் சிறப்பு. ராமரின் சமுதாயம், யாரையும் புறக்கணிக்காது, அனைவரையும் உள்ளடக்கியது. அது சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், மீனாட்சி லேகி, கிரண் ரிஜிஜு ஆகியோரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here