போலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கிய இஸ்லாமிய பயங்கரவாத கும்பல்

0
182

கர்நாடகாவின் தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர் அபிஷேக் ஹையர்மாத். இவர் உப்பள்ளியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் காவிக்கொடி இருப்பது போன்ற மாஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை தனது வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்.
அந்த வாட்ஸ்-அப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் அபிஷேக் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து அபிஷேக்கை நேற்று இரவு பழைய உப்பள்ளி பகுதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இரவு இஸ்லாமிய மதத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அபிஷேக்கை தங்களிடம் ஒப்படைக்கும்படி அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார் இப்பகுதியை விட்டு உடனடியாக விலகி செல்லும்படி எச்சரித்தனர்.
அதன்பின்னர் இரவு 11.30 மணி அளவில் திடீரென ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் பழைய உப்பள்ளி போலீஸ் நிலையம் முன் திரண்டனர்.
ஆத்திரமடைந்த அங்கு கூடியிருந்தவர்கள் போலீஸ் நிலையம் மீதும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். அருகில் இருந்த மருத்துவமனை, மதவழிபாட்டு தளம் மீதும் கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர்.இந்த வன்முறை சம்பவத்தால் அந்தப்பகுதியில் பதற்றமும், பெரும் பரபரப்பும் நிலவியது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here