திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லுாரியில், பி.வி.எஸ்சி., படிப்பில் முதலிடம் பிடித்த மாணவர் சங்கருக்கு, 26 பதக்கங்கள், இரண்டு பண விருதுகளை, கவர்னர் ரவி வழங்கினார்.எம்.வி.எஸ்சி., மாணவி தமிழினிக்கு ஆறு பதக்கங்கள், பி.எச்டி., ஆராய்ச்சி மாணவி ரஞ்சனி ராஜசேகரனுக்கு நான்கு பதக்கங்கள்; பி.டெக்., உணவு தொழில்நுட்பம் முடித்த பூர்விதாவுக்கு இரண்டு பதக்கங்களை, கவர்னர் வழங்கினார்.டில்லியில் உள்ள, தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் செயலர் பி.கே.ஜோஷி, பட்டமளிப்பு உரையாற்றினார்.
இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் தொழில் முனைவோராக மாற வேண்டும்.மத்திய அரசின் முயற்சிகளில், ‘ஸ்டார்ட் அப்’ தொழில் தொடங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நீங்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.முயற்சியை ஒருபோதும் கைவிட்டு விடக் கூடாது. புதிய புதிய சிந்தனைகளை வளர்க்க வேண்டும்.ஒவ்வொருவரும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் ஓர் இலக்கை நிர்ணயித்து, உழைக்க வேண்டும். அதற்காக பயிற்சியும், நிபுணத்துவமும் பெற வேண்டும். துவக்கத்தில் தோல்விகள் ஏற்படலாம். அதற்கெல்லாம் கவலைப்படாமல், தொடர்ந்து முன்னேறி சென்றால் வெற்றி நிச்சயம்.நம் நாடு இப்போது, அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது.தமிழகம், முன்னேறிய மாநிலம். ஆனால், இந்த வளர்ச்சி என்பது அனைத்து பகுதிகள், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.