இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மற்றும் 3 புதிய வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் இந்தியாவின் அதிகாரமிக்க 100 தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் பட்டியலை ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடி முதல் இடத்தில் உள்ளார்.
சமீபத்தில் 5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருப்பது, உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டது, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்த்தது போன்ற நடவடிக்கைகள் பிரதமர் மோடியின் செல்வாக்கை மேலும் உயர்த்தி இருப்பதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.