உலகின் ஸ்டார்ட் அப் துறையில் பாரதம் தலைமை வகிக்கத் தயாராக உள்ளது.

0
316

ஜம்முவில் உள்ளூர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு தொழில்துறை அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஸ்டார்ட் அப் துறையில் தொழில்துறை பங்கேற்பு என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகின் ஸ்டார்ட் அப் துறையில் பாரதம் தலைமை வகிக்கத் தயாராக உள்ளது. இத்துறையில் ஜம்மு காஷ்மீர் பின்னடைவை சந்தித்திருப்பது சற்று வருத்தம் அளிக்கிறது. நீடித்த சவாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கு தொழில்துறையும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும். 2015ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தது நாடு முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றது. பாரதத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2014ல் 1,100 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது’ என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here