பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் : இந்திய பாதுகாப்பு படையினர் பதிலடி.

0
299

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம் மைசுமாவில், நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த தலைமை காவலர் விஷால் குமார் மரணம் அடைந்தார். புல்வாமாவில் அவர்கள் நடத்திய தாக்குதலில், இரண்டு கூலி தொழிலாளர்களும், கடைக்காரர் ஒருவரும் காயம் அடைந்தனர். விஷால் குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய யூனியன் பிரதேச டி.ஜி.பி., தில்பக் சிங் ஜம்மு – காஷ்மீரில், பாதுகாப்பு படையினரும் போலீசாரும் எடுத்து வரும் நடவடிக்கைளால் அமைதி திரும்பியுள்ளது. பொது மக்களும் அமைதியை விரும்புகின்றனர். பாகிஸ்தானில் உள்ள அவர்களது எஜமானர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, பயங்கரவாதிகளால் செயல்படுத்த முடியவில்லை. இதனால் தான், அவர்கள் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி, தங்கள் விரக்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here