பெருமிதத்தால் தலைநிமிரும் பாரதம்

0
357

மும்பையில் உள்ள பிர்லா மாதோஸ்ரீ சபாகிரிஹாவில் பால விகாஸ் பரிஷத் அமைப்பின் நிறுவனர் சூரஜ் பிரகாஷின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், “பாரதம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பாரத தேசத்தவர்களாகிய நமது தலையை பெருமிதத்தால் நிமிர்கிறது. முன்பு நம்மை சீந்துவார் இல்லை. இன்று நாம் ஜி20 மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறோம். இப்போது அறிவுறுத்தியது போல் முன்பு நாம், ரஷ்யாவிடம் போர் தொடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தால் அவர்கள் நம்மை அசட்டை செய்திருப்பார்கள். பாரதம் தனது சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் நாம் அடைந்த வெற்றிகளை நாம் வியந்து பார்க்கிறோம். 2047க்குள் பாரதம் வல்லரசாக உருவாக வேண்டும். அதற்கான பாதையை வகுத்து தேசம் முன்னேறும் என்று நான் நம்புகிறேன். ஆனால் வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது பிற நாடுகளை நாம் பின்பற்றக் கூடாது. அப்படி பின்பற்றினால் நம்மால் வளர இயலாது. பாரதம், சீனா அல்லது அமெரிக்கா போல் மாற முயற்சித்தால் அது அதன் உண்மை வளர்ச்சியாக இருக்காது. பாரதத்தின் வளர்ச்சிப்பார்வை என்பது அதன் நிலை, அதன் மக்களின் அபிலாஷைகள், பாரம்பரியம், கலாச்சாரம், உலகம் மற்றும் வாழ்க்கையை பற்றிய அதன் எண்ணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்.” என்று கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “ஒரு தேசமாக நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. நாம் எதைச் சாதித்துள்ளோம், இன்னும் எதைச் சாதிக்கப் போகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here