தமிழகத்திற்கு மின்துறை சீர்திருத்த பணிகளுக்கு ரூ.7,054 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

0
358

நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறை சீரமைப்புக்காக தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம், அசாம், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு மட்டும் ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மற்ற மாநிலங்களான உ.பி.,க்கு ரூ.6,823 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.5,186 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா – ரூ.3,716 கோடி, ஒடிசா – ரூ.2,725 கோடி, அசாம் – ரூ.1,886 கோடி, ஹிமாச்சல் பிரதேசம் – ரூ.251 கோடி, மேகாலயா – ரூ.192 கோடி, சிக்கிம் – ரூ.191 கோடி, மணிப்பூர் – ரூ.180 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here