ஜம்மு எல்லையில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

0
362

ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையையொட்டி அக்னூரில் உள்ள பர்ப்வால் துணைப் பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ராணுவத்தினர் மீட்டுள்ளதாக ஜம்மு எல்லைப் பகுதி டிஐஜி எஸ்.கே சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக வியாழனன்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய ஒரு பையை மீட்டனர். அதில், நவீன துப்பாக்கிகள், 2 ரைபிள் மேகசின்கள், இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 2 பிஸ்டல்கள், 49 பிஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 4 பிஸ்டல் மேகசின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய எல்லைக்குள் ஆயுதங்களைக் கடத்த முயல்வது குறித்து சில உளவுத்துறை உள்ளீடுகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர், அதைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்புப் படையினர் அதிக உஷார் நிலையில் வைக்கப்பட்டு, தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here