ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் சிர்ஹாமா பகுதியிலும், குல்காம் மாவட்டத்தில் உள்ள சாகிசமட், டிஹெச் போரா பகுதியிலும் இன்று பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த குல்காமில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் அனந்த்நாக்கில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதி நிசார் தார் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர் சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நிலைமையை சமாளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்களுக்காக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.