புதிய கூட்டுறவு கொள்கையை உருவாக்குவது தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம், டில்லியில் துவங்கியது. இதில், அமித் ஷா பேசியது : தற்போதுள்ள சவால்கள்,எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப, கூட்டுறவுத் துறையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதன்படியே, புதிய கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்பட உள்ளது. அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் இது அறிமுகம் செய்யப்படும்.நாடு முழுதும் ஒரே சீரான விதிகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். மாநிலங்களுக்கு உதவுவதற்காகவே புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு, இது உருவாக்கப்படும்.என அவர் பேசினார்.