குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் தில்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் உரையாடிய வெங்கையா நாயுடு, வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள அறிவுறுத்தியவர், “சாதி, மதம் மற்றும் இதர குறுகிய கருத்துக்களை தாண்டி நீங்கள் எப்போதும் உயர வேண்டும், மற்ற மதங்களை ஒருபோதும் அவமதிக்காதீர்கள்.” சகிப்புத்தன்மை, பொறுமை, ஒழுக்கம், கடின உழைப்பு, வாசிப்பு மற்றும் பச்சாதாபம் போன்ற குணங்களை வளர்த்துக்கொண்டு இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் வெற்றிகரமான தலைவர்களாக ஆக்க வேண்டும். சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால் ஒருவர் தலைவராக முடியாது என்பதை குறிப்பிட்டவர், மக்களின் ஆணைக்கேற்ப தலைவர் நடக்க வேண்டும் என்றார். ஒரு தலைவர் திறமை, திறன், நல்ல நடத்தை மற்றும் பண்பு ஆகியவற்றைக் கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.