புதுடில்லி தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் இந்திய பிரதமர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அருங்காட்சியகம் திறக்க, மத்திய அரசு முடிவு செய்தது.இதையடுத்து தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் ரூ.271 கோடி செலவில் 10,975.36 ச. மீ., பரப்பளவில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 14 முன்னாள் பிரதமர்களின் அபூர்வப்படங்கள், குறிப்புகள், உள்பட அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது.அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் துவங்கி நிறைவடைந்ததையடுத்து இன்று (ஏப். 14) பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.