மாலி துாதராக இந்திய பெண் நியமனம்

0
194

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மாலி தீவு துாதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்னா சச்தேவா கோர்ஹோனன் என்பவரை நியமித்துள்ளார்.அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர், ரச்னா சச்தேவா கோர்ஹோனன். இவரை, மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி தீவின் துாதராக, ஜோ பைடன் நியமித்துள்ளார். ரச்னா சச்தேவா தற்போது அமெரிக்க வெளியுறவு துறையில் துணை உதவி அமைச்சராக உள்ளார்.இவர், சவுதி அரேபியாவில் அமெரிக்க துணை துாதராகவும், மும்பையில் உள்ள அமெரிக்க துணைத் துாதரகத்திலும் பணி புரிந்துள்ளார். இவர் அமெரிக்க அரசுத் துறையில் சேருவதற்கு முன் ஏ.டி அண்டு டி, ஐ.பி.எம்., போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.ஜோ பைடன் ஒரே மாதத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவரை துாதர்களாக நியமித்துள்ளார். சமீபத்தில், புனித் தல்வார், ஷெபாலி ரஸ்தான் துகால் ஆகியோர் மொராக்கோ, நெதர்லாந்து நாடுகளுக்கான அமெரிக்க துாதர்களாக நியமிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here