தி டெல்லி பைல்ஸ்

0
309

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ என்ற தனது புதிய படம் இந்த கோடைகாலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரசார் நடத்திய கலவரம் மற்றும் 2020ல் நடந்த டெல்லி சி.ஏ.ஏ கலவரத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்படும் என்று வதந்திகள் பரவி வரும் போதிலும், அவர் தனது அடுத்த படத்தைப் பற்றிய எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. தனது சாதனைப் படமான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கும் ஆதரவிற்கும் இயக்குனர் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here