ஆங்கிலத்திற்கு எதிரான போராட்டம் என்பது இந்தி பேசுபவர்களின் போராட்டம் மட்டுமல்ல. இது உண்மையில் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் உள்ள பொதுவான பிரச்சனை. பிரிட்டிஷார் தங்களது ஆட்சியை வலுப்படுத்த, பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றினார்கள் என்றால், ஆங்கிலமொழி ஆதரவாளர்களும் இந்த அன்னிய மொழியை நிலைநிறுத்த, அதே காரியத்தைச் செய்கிறார்கள். ஆங்கிலம் அகற்றப்பட்டால், அந்த இடத்தை இந்தி மட்டுமே ஆக்கிரமிக்கப் போவதில்லை. இந்தி மற்றும் பிராந்திய மொழிகளால் கூட்டாக ஆக்கிரமிக்கப்படும். ஆங்கிலம் இருந்தால் இந்தியாவில் எந்த மொழியும் வளர முடியாது. தமிழ், வங்காளம் மற்றும் பிற மொழிகளை அந்தந்தப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தது இந்தி தானா? கேரளாவில், சட்டமன்றமும் நிருவாகப் பணிகளும் மலையாளத்திற்குப் பதிலாக இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று யாரும் கூறவில்லை. ஆனால், ஆங்கிலம் அகற்றப்படாவிட்டால் மலையாளம் இருப்பது கடினமாகும்.”
– பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா