இலங்கை டு தனுஷ்கோடி நீந்திய ஆந்திர மாணவர்கள் சாதனை

0
200

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம், கிருஷ்ணாபட்டினத்தை சேர்ந்தவர்கள் பிரணவ்ராகுல் 18, பேபி ஸ்பந்தனா 17, சாத்விக் 15, அலங்குருத்தி 13, இரட்டை சகோதரர்கள் ஜார்ஜ் 15, ஜான்சன் 15.இவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சியாளர் துளசி, உதவியாளர்களுடன் ஏப்., 22 மாலை ராமேஸ்வரத்தில் இருந்து படகில் புறப்பட்டு இலங்கை தலைமன்னார் சென்றனர்.அன்றிரவு 12:00 மணிக்கு தலைமன்னார் கடலில் நீந்த துவங்கி நேற்று காலை 10:30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர்.28.32 கி.மீ., தூரத்தை 10:30 மணி நேரத்தில் நீந்தி சாதித்தனர். சாதித்தவர்களை ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here