இந்தியா இல்லாமல் உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – ஜெர்மன் மந்திரி

0
429

“இந்தியா இல்லாமல் எந்த ஒரு பெரிய உலகளாவிய பிரச்சினையையும் தீர்க்க முடியாது.இந்தியாவும் ஜெர்மனியும் தொழில்நுட்பம், கல்வி, பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் தங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்கும்.
ஜெர்மனியின் முக்கியமான கூட்டாளியாக இந்தியா உள்ளது. ஜெர்மனி-இந்திய உறவுகளை ஆழப்படுத்த எதிர்பார்க்கிறோம்” என்றார்.மே 2 முதல் 4 வரை இந்த ஆண்டு தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தின் போது பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்யவுள்ளார்.ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஓலாப் ஸ்கோல்சுடன் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான ஆலோசனை (ஐஜிசி) கூட்டத்தின் ஆறாவது பதிப்பில், இரு தலைவர்களும் கலந்து கொள்வார்கள். இருநாட்டு மந்திரிகளும் பங்கேற்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here