ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்வதால் மட்டுமே ஒரு தேசமோ அல்லது சமூகமோ உருவாவது இல்லை. அதுபோலவே, தேசிய உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வாழ்வதால் ஏற்படுவதன்று. அது வேறொன்றில் உள்ளது. ஒரே குழுவினராக, ஒரு குறிப்பிட்ட நிலத்தைத் தனது தாய் நாடாகக் கருதி குறிக்கோளுடனும் சிறந்த கொள்கையுடனும் வாழும்போது ஒரு தேசம் உருவாகிறது. தாய்நாடு உணர்வு, கொள்கை உணர்வு ஆகிய இரண்டில் ஒன்று இல்லையென்றாலும் எந்தத் தேசமும் இல்லை. தேசத்தை உருவாக்கும் இந்த உணர்வுகளின் சேர்க்கை தேசிய உணர்வாகக் கருதப்படுகிறது.”
– பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா