கிறிஸ்துவ மிஷனரி இல்லத்தில் இளைஞன் மர்மமான முறையில் மரணம்

0
629

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மனநிலை பாதித்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த, 19 வயது இளைஞர் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தார். கிறிஸ்துவ மிஷனரி இல்ல இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர் . புளியடிதம்பம் அருகே உறுதிகோட்டையைச் சேர்ந்த இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், நடேசபுரம், ‘டுவென்லா அன்பகம்’ காப்பகத்தில் சேர்த்தனர்.அவருடன் 27 சிறார்கள் தங்கி இருந்தனர். நேற்று காலை இல்லத்தின் பின்புற கிணற்றில் மர்மமான முறையில் அந்த இளைஞர் இறந்து கிடந்தார்.அஜாக்கிரதையாக செயல்பட்ட இல்ல இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறுதிக்கோட்டை மக்கள், மதுரை — தொண்டி ரோட்டில் ஒரு மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here