வெறுப்பு அரசியலை நிறுத்துங்கள் என்று முன்னாள் அரசு அதிகாரிகள் 108 பேர் கையெழுத்து இட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

0
485

கையெழுத்து இட்டவர்கள் எல்லாம் கடந்த காலங்களில் மிகவும் வலுவான பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்.

டெல்லி முன்னாள் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ நாயர் போன்றோர்.

கடிதத்தின் முக்கிய சாரம்சம்

“சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு வன்முறை கடந்த சில வருடங்களாகவும், மாதங்களாகவும் அதிகரித்துள்ளது.

 

இந்த அச்சுறுத்தல்களால் ஆபத்தில் இருப்பது அரசியலமைப்பு மட்டுமல்ல, நமது மிகப் பெரிய நாகரிக மரபும் சமூக கட்டமைப்பும்தான்.

இந்த சமூக அச்சுறுத்தலுக்கு எதிரான உங்கள் மௌனம், காது கேளாதது போல் உள்ளது.”

இவர்கள் எல்லாம் பதவியில் இருந்த போது பல நூறு கலவரங்கள் நடந்தது. பல்லாயிரம் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

காஷ்மீர் படுகொலை சம்பவங்கள் அரங்கேறிய போது வாய்மூடி பதவியின் சுகத்தை ரசித்தவர்கள் இவர்கள்.

முஷாபர்நகர் கலவரத்தின் போது, இவர்கள் வாய் திறந்தது சமோசாவும் வறுத்த முந்திரிபருப்பும் சாப்பிட தான்.

மும்பை தாக்குதல் மற்றும் கலவரகாலத்தில் தங்களது பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டார்களே தவிர தாக்குதல் நடத்த காரணமானவர்களை கண்டிக்க துணியாதவர்கள்.

படுகொலை சம்பவங்களையும் கலவரங்களையும் நிகழ்த்தியவர்கள் யாரென்று தெரியும். அவர்களின் உலகை கைப்பற்றும் சிந்தனை குறித்தும் தெரியும். ஆனால் இந்த அறிவுஜீவிகள் யாரும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இந்த கடிதத்தில் கையெழுத்து இட்ட கூட்டத்தில் ஒருவர் கூட கலவரகாரர்களை கண்டிக்கவில்லை.

படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைத்ததா என்று அக்கறை கொண்டு விசாரித்ததில்லை.

படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் குடும்பத்தினர் நிலை குறித்து எந்த கவலையும் கொண்டதில்லை. அவர்களுக்காக தங்களது பணத்தில் ஒரு ரூபாயை கூட செலவழித்தது கிடையாது.

அவ்வளவு காலம் பின்னோக்கி கூட பேச வேண்டாம்.

ஆனால் தற்போது மபி, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரா வரையிலான சமீபத்திய கலவரங்களை திட்டமிட்டு முன்னெடுத்து கல்வீச்சு சம்பவங்களை நடத்தியவர்களையும் வாள் கொண்டு தாக்கியவர்களையும் கூட

இவர்கள் கண்டிக்க முன்வரவில்லையே அது ஏன்?

ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ், சிஎன்என் நியூஸ்18 என அனைத்து வடமாநில சேனல்களும் கலவரம் செய்தவர்கள் குறித்தும், கற்களை மாடிகளில் குவித்து வைத்திருந்தது குறித்தும்

 

அவர்கள் தாக்குதல் நடத்திய பல வீடியோக்களையும் வெளியிட்டனர். அதுமட்டுமின்றி காவல்துறை பதிவு செய்த வழக்குகள் அனைத்திலும்  கலவரத்தை நிகழ்த்தியவர்கள் குறித்த விவரங்கள் பதிவாகியுள்ளது.

 

அது தவிர

கர்நாடகாவில் நிகழும் வன்முறை சம்பவங்களுக்கு பிண்ணனியில் பிஎப்ஐ மற்றும் ஏஐஎம்ஐஎம் இருக்கிறது என்று காவல்துறை மட்டும் அல்ல பிரபல சேனல்களும் தெரிவித்தனர்.

இந்த முன்னாள் உயர் அதிகாரிகளுக்கு நமது கேள்வி என்னவென்றால்,

நீங்கள் அரசியல்வாதிகள் அல்ல.

உயரிய பதவி வகித்த உங்களுக்கு கடந்த காலங்கள் மற்றும் நிகழ் காலத்தில் நடக்கும் மத பிரச்சினைகளுக்கு இந்துக்கள் மட்டுமே காரணமாக தோன்றுகிறதா?

உலக அளவில் என்ன மாதிரியான மத நடவடிக்கைகள், பிரச்சினைகள் நடந்து வருகிறது. அதன் தாக்கம் இந்தியாவில் என்ன மாதிரியான  விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது?. என்று கூடவா உங்கள் அறிவுக்கு எட்டவில்லை?

ஆனால் நீங்கள் அதிகாரிகளாக இருந்த போது அரசியல்வாதிகளின் பணியாளர்களாக இருந்தீர்கள்.

இப்போது வெற்று நியாயம் பேசும் வீணர்கள் ஆகி விட்டீர்கள்.

 

கூட்டம் சேர்த்து கல்லெறிந்தவர்களும், இரு சக்கர வாகனங்களை கொளுத்தி விட்டவர்களும் உங்களது பார்வையில் அப்பாவிகள்

ஆனால்

ஜெய் ஶ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பிய படி வாகனத்தில் பயணித்தவர்கள் மன்னிக்க முடியாத கொடூரமான குற்றவாளிகளா?

சகிப்புத்தன்மையை யாருக்கு போதிக்க வேண்டும் என்று ஏன் அறிவுஜீவிகள் ஒருவருக்கும் புரியவில்லை?

இல்லை என்றால் கலவரகாரர்களை தட்டி கேட்க உங்களுக்கு அச்சமாக உள்ளதா?

அமைதியும் சமாதானமும் எப்போதும் வேண்டும் எனில்

வழிபாட்டுதலங்களில் வன்முறை பாடங்களை நடத்தி தூண்டிவிடுபவர்களை கண்டித்து ஒரு வார்த்தை பேசி விட்டு பிரதமருக்கு கடிதம் எழுதுங்கள்.

மோடி இரண்டு கண்களையும் திறந்து பிரச்சினைகளை பார்க்கிறார்.

இரண்டு காதுகளையும் கூர்மையாக்கி பிரச்சினைகளை கேட்கிறார்.

தீர்வினை நோக்கி நடக்கின்றார்.

 

ஆனால் நீங்கள்

உங்களது இரண்டு கண்களையும் திறந்து பிரச்சினைகளை பார்க்க மறுக்கின்றீர்கள்.

உங்களது இரண்டு காதுகளையும் திறந்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரம் இந்துக்களின் அவலக்குரல் கேட்க மறுக்கின்றீர்கள்.

“நடுநிலையாளர்களாக உங்களை காட்டி கொள்ள துடிக்கும் நீங்கள்,

நியாயவாதிகளாக நடந்து கொள்ள மறுப்பது ஏன்?”

அமைதி நிலவ வேண்டும் என்பதில் உங்களுக்கு நிஜமான அக்கறை இருக்கும் என்றால்

வெளிப்படையாக அனைத்து தரப்பினரையும் எச்சரித்து, சகிப்புத்தன்மை உடன் அனுசரித்து செல்லுங்கள் என்று உரக்க சொல்லுங்கள்.

கல் எறிபவர்களிடமும் ஆயுதங்களை பிரயோகிப்பவர்களிடமும் கண்டிப்பு காட்டுங்கள்.

ஆனால் ஒருதலை பட்சமாக உங்காளுகளை அடக்கி வையுங்கள் என்று கடிதம் எழுதாதீர்கள்.

இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.(இன்னும் கேவலமாக குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் நீங்கள் வகித்த பதவிகள் என்னை தடுக்கிறது).

தவறுகள் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தட்டி கேளுங்கள்.

எப்போதும் நியாயம் பேச முன்வாருங்கள்.

வழக்கம் போல உங்களது பொறுப்புகளை தவிர்த்து விட்டு மற்றொருவர் மீது பழி சுமத்தாதீர்கள்.

இரண்டு கண்களையும் திறந்து  பாருங்கள்.

உங்களைப் போன்ற

“ஒற்றை கண் ஜனநாயகவாதிகளால்”

இந்த நாடு சுயத்தை மீட்க தவிக்கிறது.

‘விழித்து கொள்ள வேண்டியது நீங்கள் தான்.’

வைரவேல் சுப்பையா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here