நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தில் 34,800 கி.மி. சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, 20,411 கி.மி. சாலை அமைக்க ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான மொத்த செலவு ரூபாய் 6,18,686 கோடி ஆகும்.
மேலும் சாகர்மாலா திட்டத்தில் 2041 கி.மி. சாலை அமைக்க 65 திட்டங்களும், பர்வத்மாலா திட்டத்தில் ரூபாய் 20,000 கோடி மதிப்பில் 320 கி.மி. மொத்த நீளம் கொண்ட 47 ரோப்வே திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.