ஸ்ரீ குருஜி மாதவ சதாசிவ கோல்வால்கர்

0
72

ஸ்ரீ குருஜி (மாதவ சதாசிவ கோல்வால்கர்) சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ ஆகியோரின் தத்துவங்களில் உள்ள தேசியவாத சிந்தனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்டார். சமூகத்திற்கும், தேச வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளார்.

1906ம் ஆண்டு பிறந்தவர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுநிலை கல்வியில் முதல் பிரிவில் தேர்ச்சி பெற்றார். பின்னர், சென்னை கடல் சார் மையத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு அவருக்கு அனுமதி கிடைத்தது.
பொருளாதார தடையால், அவர் பாதியிலேயே தனது ஆராய்ச்சியை கைவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சட்டமும் படித்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலேயே ஆசிரியராக பணியாற்றினார். அவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது பண்டிட் மதன் மோகன் மாளவியாவுடன் நெருங்கிப் பழகினார்.

வங்காளத்தின் முர்சிதாபாத்தில் உள்ள சரகச்சி ஆசிரமத்திற்குச் சென்று சுவாமி இராமகிருஷ்ணரின் குருகுலத்தில் சுவாமி அகண்டானந்தரின் சீடரானார். சுவாமி அகண்டானந்தரின் அறிவுரைப்படி துறவறம் மேற்கொள்ளாது, சமூக சேவையில் ஈடுபட, 13 ஜனவரி 1937ல் கோல்வால்கர் நாக்பூருக்கு திரும்பினார்.

கோல்வால்கர், பனராஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் போது, RSS அமைப்பின் நிறுவனரும், அதன் முதல் தேசியத் தலைவருமான கேசவ பலிராம் ஹெட்கேவாருடன் நெருங்கிப் பழகியதன் காரணமாக வாரணாசியில் சங்கத்தின் கிளையை அமைத்தார்.

பின்னர் நாக்பூரில் உள்ள RSS அதிகாரிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். 1939ம் ஆண்டில் RSS அமைப்பின் பொதுச் செயலர் ஆனார். கேசவ பலிராம் ஹட்கேவரின் மரணத்திற்குப் பின் 1940ஆம் ஆண்டு முதல் 1973ம் ஆண்டு முடிய RSS அமைப்பின் தலைவராக வழிகாட்டினார்.

கோல்வால்கர் RSS அமைப்பின் தலைவராக இருந்த காலத்தில் நாடு முழுவதும் அமைப்பின் கிளைகள் நிறுவப்பட்டது.

ஸ்ரீகுருஜியின் நினைவுதினம் இன்று…(05.06.1973)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here