இஸ்லாமிய வெறிச்செயல் : தங்கையின் கணவரை கொன்ற அண்ணன்

0
214

தெலுங்கானாவில் ரெங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜு 30, செகந்திராபாத் நகரைச் சேர்ந்த அஸ்ரி சுல்தான் என்ற பெண்ணை காதலித்தார். பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி, ஜனவரி 22ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்துக்குப் பின், அஸ்ரி சுல்தான் தன் பெயரை பல்லவி என மாற்றிக் கொண்டார். காதல் மனைவியுடன் விசாகப்பட்டினம் சென்று, அங்கு நான்கு மாதங்கள் தலைமறைவாக இருந்தார். பின் அஸ்ரி குடும்பத்தினர் சமாதானம் ஆகியிருப்பர் என கருதிய அவர், தன் மனைவியுடன் மீண்டும் ஹைதராபாத் வந்தார். இதையறிந்த அஸ்ரி சுல்தானின் சகோதரர் செய்யது மொபின் அகமது மற்றும் அவரது நண்பர்கள், நேற்று முந்தினம் நாகராஜுவை கடப்பாரையால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, செய்யது மொபின் அகமதுவை கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். ”எதிர்ப்பையும் மீறி என் தங்கை ஹிந்து மதத்தை சேர்ந்த நாகராஜுவை திருமணம் செய்ததால் கொலை செய்தேன்,” என செய்யது மொபின் அகமது வாக்குமூலம் அளித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here