கேரளா 30 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை ; மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி (முன்னாள் ஆசிரியர்) போக்சோ வழக்கில் கைது!

0
459

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் கே.வி.சசிகுமார். மலப்புரம் நகராட்சியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலராக இருந்தார். சசிகுமார் 38 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி கடந்த மார்ச் 31ம் தேதி அன்று ஓய்வு பெற்றார். பள்ளியின் சார்பில் அவருக்கு வழங்கிய ‘பிரமாண்டமான பிரியாவிடை’ குறித்து அவர் சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவிட்டார். இந்த நிலையில் சசிகுமாரின் முன்னாள் மாணவர் ஒருவர்.மஞ்சேரியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் குமார் என்பவர், ‘கே.வி.சசிகுமார் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னிடம் பயின்ற மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக’ பதிவிட்டு உள்ளார் . அந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை பார்த்த பலரும் சசிகுமாரை விமர்சித்து கருத்து பதிவிட்டனர். குறிப்பாக மாணவிகள் பலரும் சசிகுமாரால் தாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், சசிகுமாரால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது மலப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சசிகுமார் விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி கேரள கல்வி துறை மந்திரி சிவன்குட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னாள் பள்ளி ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலருமான கே.வி.சிவகுமார் போக்சோ வழக்கில் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். அவரிடம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here