பாகிஸ்தானில் 2 சீக்கியர்கள் சுட்டுப் படுகொலை

0
185
துயரமான தேசப் பிரிவினையால் துண்டாடப்பட்டு பாகிஸ்தான் நாடு உருவானது முதல் ஹிந்துக்கள், சீக்கிய ஹிந்துக்கள், அகமதியா முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உட்பட தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அதிக பாதிப்பிற்கு ஹிந்து வளர் இளம் பெண்கள் தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஹிந்து இளைஞர்கள் படுகொலை செய்யப் பட்டு வருவதையும் காண முடிகிறது. அந்நாட்டில் என்றைக் கும் முடிவுக்கு வராத தொடர்கதை யாகும் இது. இதன் காரணமாகத் தான் அந்நாட்டில் இருந்து உயிர் தப்பி பாரதத்தில் தஞ்சம் அடைந்த வர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்கிட சட்டம் இயற்றியது.
பாகிஸ்தான் பேஷாவார் நகரில் நறுமணப் பொருட்கள் விற்பனை செய்துவந்த சீக்கிய ஹிந்துக்க ளான சுல்ஜீத் சிங்(42), ரஞ்சீத் சிங் (38) ஆகிய இருவரையும் அடையா ளம் தெரியாத 2 பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் யார் என்று சொல்லாத் தேவை யில்லை. ஆனால் இங்கு சில வழி தவறிய காலிஸ்தான் போராளிகள் பாகிஸ்தானின் கொத்தடிமை களாகிப் போராடி வருகின்றனர்.
(ISKP) Islamic State Wilayah Khorasan of Pakisthan இப்படுகொலைக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here