சென்னை பல்கலைக் கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, பட்டம் பெற்றவர்கள், குடும்பத்திற்கு மட்டுமின்றி, நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும். உலகின் தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். தமிழின் புகழை தமிழகத்தை தாண்டி கொண்டு செல்ல வேண்டிய காலம் வந்துள்ளது. தமிழை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். தமிழ் குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்படுவது தேவையான ஒன்றுதான். ஏராளமான இலக்கியச் செல்வங்கள் தமிழ் மொழியில் உள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். தமிழ் இருக்கைகளை பிற மாநில பல்கலைக் கழகங்களிலும் ஏற்படுத்த ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன்’ என்று பேசினார்.