உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி கட்டடம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றமே விசாரிக்கும், இதனை, நீதித்துறையில் அனுபவம் மற்றும் மூத்த நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். மே 17ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஞானவாபி வளாகத்தில் ‘சிவலிங்கம்’ காணப்பட்ட பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்படுகிறது, வுசு மற்றும் நமாஸை முஸ்லிம்கள் எளிதாக மேற்கொள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் வழிவகை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, ஆய்வு விவரங்களை கசிய விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.