அகிம்சை யாத்திரை நிறைவு விழா

0
290

அகிம்சை யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், 3 நாடுகளில் 18 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரையை ஆச்சார்ய மகாஷ்ரம்மன் நிறைவேற்றியதற்கு பாராட்டுத் தெரிவித்தார். வசுதைவ குடும்பகம், ஒரே பாரதம் உன்னத பாரதம் போன்றவற்றை உறுதிமொழியாக தேராபந்த் பரப்புவதை பாராட்டிய மோடி, ஸ்வேதாம்பர் தேராபந்துடன் நீண்ட காலத் தொடர்பு இருந்ததை நினைவு கூர்ந்தார். இந்த தேராபந்த்’தான் எனது பாதை என தான் கூறியதையும் நினைவுபடுத்தினார். பாதயாத்திரையின் கருப்பொருளான நல்லிணக்கம், ஒழுக்கம் மற்றும் பற்றிலிருந்து விடுபடுவது ஆகியவற்றை பாராட்டிய பிரதமர், எந்தவித பழக்கத்துக்கும் அடிமையாக நிலையில்தான், உண்மையான சுய உணர்தல் சாத்தியமாகும். பற்றிலிருந்து விடுபடுவது, பிரபஞ்சத்துடன் ஒருவர் இணைவதற்கும், அனைவருக்குமான நலனை உணர்வதற்கும் வழிவகுக்கிறது. விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்துக்கு இடையில், சமூகத்துக்கான கடமைக்கு நாடு நம்மை அழைக்கிறது. சுயநலத்தை தாண்டி நாடு செல்கிறது. அனைத்தையும் அரசு மூலம் செய்ய வேண்டும் என்பது பாரதத்தின் இயல்பாக இருந்ததில்லை; இங்கே அரசு, சமூகம், ஆன்மீகம் ஆகியவை எப்போதும் சம அளவிலான பங்கைக் கொண்டிருக்கின்றன என்றும் கூறினார். மேலும், ஆன்மீகத் தலைவர்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு, நாட்டின் உறுதிமொழிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here