அமெரிக்காவில் இன மதப் பாகுபாடு

0
446
ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான மையம் (CDPHR), அமெரிக்காவில் நிலவும் குழப்பமான மனித உரிமைகள் பிரச்சினைகள், மத பாகுபாடு, பிற சிறுபான்மையின பிரச்சனைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான மையம் (CDPHR) என்பது மனித உரிமைகள் துறையில் பரந்த அளவில் பணிபுரியும் ஒரு அமைப்பாகும்.
 
அந்த அறிக்கையில், “அமெரிக்க அரசியல் ஸ்தாபனம், ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களால் ஹிந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின சமூகத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சமூகங்கள் மீது பல்வேறு வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகங்கள் மிக அதிகமாக நடைபெறுகிறது. அமெரிக்காவில் பெண்கள் வன்முறைக்கு இலக்காகிறார்கள்.
 
இரண்டாம் உலகப் போரின் வெற்றிக்குப் பிறகு, மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் உயர்ந்த கொள்கைகளின் அடிப்படையில் ஐ.நாள் சபை போன்ற பல்வேறு உலகளாவிய நிறுவனங்களை அமைப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. ஆனால், அமெரிக்கா இந்த ஒப்பந்தங்கள் அனைத்தையுமே மீறுகிறது. இந்த ஒப்பந்தங்கள் அகற்ற விரும்பும் தவறான செயல்களை நியாப்படுத்துகிறது. இதன் விளைவாக, அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பிற பகுதி மக்களுக்கும் ஏற்படும் பெரும் துன்பங்களுக்கு அமெரிக்காவே காரணம்.
 
உலகெங்கிலும் உள்ள ஹிந்துக்கள், ஷியா முஸ்லீம்கள், மிஸ்ராஹி யூதர்கள் மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இந்த துன்பங்களில் பெரும்பாலானவை சமூக அமைப்பில் கட்டமைக்கப்பட்ட ஒரு சார்புவாதிகளால் ஏற்படுத்தப்படுகின்றன.
 
கறுப்பின மக்கள் மற்றும் பிற சிறுபான்மை இனங்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. அவர்கள் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். மத சுதந்திரம் என்பது அமெரிக்கா அதிகமாக உச்சரிக்கும் சொல். ஆனால், அதே அமெரிக்கா தனது சொந்த விருப்பமான மதத்தை கொண்டிருப்பதால் அது நடைமுறையில் தோல்வியடைந்துள்ளது. நீதித்துறை கத்தோலிக்கர்கள் மற்றும் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த யூதர்கள் அதிகமாக உள்ளனர். வெள்ளையர்கள் செய்யும் குற்றங்களுக்கு சிறிய தண்டனையும் கறுப்பினத்தவர்கள் செய்யும் அதே குற்றத்திற்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது. பெண்கள் மீது வன்முறை நிகழ்த்தும் குற்றவாளி அரசியல், ஊடகம் அல்லது வணிகத்தில் உள்ள ஒரு நபராக இருந்தால், குற்றங்களை அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெண்கள் உள்ளனர். இதனால் அமெரிக்க சட்டம் முற்றிலும் தோல்வியடைந்து உள்ளது.
 
உலகெங்கிலும் உள்ள நாடுகள், அமெரிக்கவின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதற்கு சர்வதேச அமைப்புகளை அமெரிக்கா பயன்படுத்துகிறது. ஏற்காத நாடுகளின் மீது சட்டவிரோத பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. பல்வேறு நாடுகளில் அமைதியின்மையைத் தூண்டிவிட்டு, தனது ஆதிக்கத்தைத் தொடரும் நோக்கத்துடன் பல போர்களைத் தொடங்குவதும் குற்றம் தான்.
 
சமீபத்திய ஆண்டுகளில், சுதந்திரமான பேச்சு உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் அழிக்கப்பட்டு, இணைய கட்டுப்பாடுகள் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களில் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன, மேலும் அவை அமெரிக்க அரசாங்க அதிகாரிகளின் கருத்துடன் பொருந்தக்கூடிய ஒரே குரலில் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பொதுவாக, அங்கீகரிக்கப்பட்ட தாராளவாத அல்லது ‘பழமைவாதங்களின் பகுதியாக இல்லாத எந்தவொரு கருத்தும் ஒரு தீவிரவா’ நிலைப்பாடு என்று முத்திரை குத்தப்படுகிறது. மேலும் சுதந்திரமான நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் பொது வெளியில் வேட்டையாடப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here