ஆதீனத்தை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர்

0
366

மதுரை ஆதினத்தின் 293வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகளை, எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். இதில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், அப்துல் சிக்கந்தர் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது மதுரை ஆதீனம் தான் வைத்திருந்த முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை வாசித்துக் காட்டினார். மேலும் தன்னை சந்திக்க வந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினருக்கு திருநீறு, குங்குமம் கொண்ட பிரசாத பையை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here