பிரேசிலில் காது கேளாதோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அண்மையில் நடந்து முடிந்தது. மொத்தம் 17 பதக்கங்களை நமது வீரர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். 8தங்கம், 1வெள்ளி, 8வெண்கலப் பதக்கங்கள் ஆகும். இப்போட்டிகளில் நமது நாட்டில் இருந்து முதல் தடவையாக அதிக எண்ணிக்கையில் வீரர்கள் பங்கேற்றனர். வெற்றிபெற்ற வீரர்களை சந்தித்துப் பேசிய பிரதமர் அவர்களது அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதுடன் அவர்களைப் பாராட்டினார்.

