முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளான பி.எப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ நடத்திய நிகழ்ச்சியில் காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வெற்றி செல்வன் கலந்துகொண்டார். இது அப்பகுதியில் வாழும் மக்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து அறிந்த அப்பகுதி இந்து முன்னணி அமைப்பினர், வெற்றி செல்வனை உடனடியாக பதவி நீக்கம் செய்யக்கோரி காரைக்கால் தலைமை தபால் நிலையத்தில் புதுவை முதல்வர் ரங்கசாமிக்கும் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கும் இந்து முன்னணி சார்பில் கோரிகை கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.