விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஒரு அங்கமான, அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில், மதுரை பரவை ஆகாஷ் கிளப் மஹாலில் வரும் ஜூன் 4 மற்றும் 5 தேதிகளில் துறவியர் மாநாடு நடக்கவுள்ளது. இதில், அனைத்து ஆதீனங்கள், ஜீயர்கள், துறவிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் வி.ஹெச்.பி அமைப்பின் அகில உலக பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே, அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழு பொருளாளர் கோவிந்தகிரி மஹராஜ், அறக்கட்டளை உறுப்பினர் உடுப்பி விஸ்வபிரசன்ன தீர்த்த ஸ்வாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில், ஹிந்து அறநிலையத் துறையை தனித்து இயங்கும் வாரியமாக அரசு அறிவிக்க வேண்டும், மத மாற்றத்தை தடுப்பது; தாய் மதத்திற்கு திரும்புவோரை ஊக்குவிப்பது; கிராமங்களில் துறவியர் தங்கி தொண்டாற்றி ஏற்றத்தாழ்வுகளை போக்குவது, பள்ளி குழந்தைகளுக்கு ஹிந்து சமய கருத்துக்களை கொண்டுசேர்ப்பது; சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.