பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மூலம், திருப்பூர் 30 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித்தருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும், 10 லட்சம் தொழிலாளர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.கடந்த 1985ல் 15 கோடி ரூபாயாக இருந்த திருப்பூரின் ஏற்றுமதி, தற்போது 30 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. 37 ஆண்டுகளில், 2 ஆயிரம் மடங்கு ஏற்றுமதி உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 22.8 சதவீதம் என்ற சிறந்த ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியுடன் திருப்பூர் பயணிக்கிறது.
திருப்பூரின் இந்த வளர்ச்சியை, உலகில் எந்த ஒரு நகரத்துடனும், ஒப்பிட முடியாது. நாட்டின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், திருப்பூரைப் போன்ற 75 ஆடை உற்பத்தி நகரங்களை நாடு முழுவதும் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.