நம் நாட்டின் ராணுவத்தில் உயர்ந்த பதவியான, ‘பீல்டு மார்ஷல்’ பதவி வகித்த சாம் மானெக் ஷா, ராணுவ சேவைக்கு பிறகு, நீலகிரி மாவட்டம் குன்னுாரில் குடியேறினார். கடந்த, 2008 ஜூன், 27ல் மறைந்த அவரது நினைவிடம், ஊட்டி பார்சி ஜோராஸ்ட்ரியன் மயானத்தில் உள்ளது.நேற்று அவரின், 14வது நினைவு தினத்தையொட்டி, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி, மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில், மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்