தமிழக விவசாயிகளிடம் தோற்று போன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

0
206

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு திட்டமிட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 27ம் தேதி நேரடி நெல் விதைப்பு பணியை தடுக்க முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை ஆர்டிஓ யுரேகா சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144(3)ன்படி மேலபருத்திக்குடி மற்றும் கீழப்பருத்திக்குடி, காலனித்தெரு உள்ளிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.அப்பகுதியில் ஏடிஎஸ்பி தங்கவேல் தலைமையில் 3 டிஎஸ்பிகள், 8 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 150 போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனையடுத்து காலை 9 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் தங்கள் வயல்களில் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here