திரிபுரா போர் நினைவிடம் காளி கோவிலாக மாறியது

0
359
ஸ்ரீநகர்-வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் எல்லை பகுதியில், போர் நினைவிடமாக காளி கோவில் கட்டப்பட்டுள்ளது 1971ல், பாகிஸ்தானுக்கு எதிராக கிழக்கு வங்காள #ரெஜிமென்ட் வெகுண்டு எழுந்தது. அதில் அவர் கூறியுள்ளதாவது:அப்போதைய கிழக்கு பாகிஸ்தானை ஒட்டியுள்ள திரிபுராவின் ஸ்ரீநகர் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு எல்லை பாதுகாப்புப் படையின் முகாம் உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தை அப்போது தடுத்து நிறுத்தியது.ஸ்ரீநகரில் உள்ள நம் படையின் நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. ‘பிரசிசன் டார்க்கெட்’ எனப்படும் முக்கிய இலக்காக அந்தப் பகுதி அமைந்தது. அதாவது, 10 நிமிடங்களுக்குள் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியில் சுடுவது. இவ்வாறு சுடும்போது, அந்த இலக்கு தகர்ந்து விடும்.ஸ்ரீநகரில் உள்ள பதுங்குக் குழியில், ஒரு நேபாளி கிறிஸ்துவர், ஒரு மேற்கு வங்க முஸ்லிம் மற்றும் ஹிந்து வீரர் இருந்தனர். அவர்களை வெளியே வர வேண்டாம் என்று நாங்கள் தகவல் அனுப்பினோம்.“போர் காளி கோவில்”நேரத்தில் ஹிந்துக் கடவுள் காளியை வேண்டிக் கொள்ளும்படி மற்ற இருவருக்கும் ஹிந்து வீரர் கூறினார். மாற்று மதத்தினராக இருந்தபோதும், அவர்களும் வேண்டிக் கொண்டனர்.ஒரு குளம் மற்றும் அதைச் சுற்றி புதர்களுக்கு இடையே இந்த பதுங்குக் குழு அமைந்திருந்தது. மேலும் அங்கிருந்த மூங்கில் மரங்கள் தடுப்பு அரணாக இருந்து அவர்களை பாதுகாத்தது.அதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் போர் நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது, ‘போர் காளி கோவில்’ கட்டும்படி, படையில் இருந்த கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் வீரர்கள் கூறினர். அதையடுத்து நிதி திரட்டப்பட்டு, அங்கு கோவில் கட்டப்பட்டது.இது தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here