இந்திய மியான்மார் எல்லையில் இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொலை

0
344

மியான்மார் மணிப்பூர் எல்லைப் பகுதி யான மோரேயில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். மோஹன், ஐயனார் என்ற 2 தமிழ் இளைஞர்கள் மிதிவண்டி ஒட்டிக் கொண்டு மியான்மார் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது மியான் மார் இராணுவத்தினர் சுட்டதில் இருவரும் இறந்துவிட்டனர். கொல்லப்பட்ட இருவரின் உடலையும் மியான்மார் ராணுவம் நமது ராணுவத்தினர் (உறவினர்களிடம்) வசம் இன்னும் தரவில்லை. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டநிலை காணப்படுகிறது. நம் இராணுவ அதிகாரிகளும் இது விஷயமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here