இந்தியாவில் ‘ஸ்டார்ட்அப்’ பள்ளிகளைத் தொடங்கிய கூகுள் நிறுவனம்..!!

0
192

இந்தியாவில் ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டும் வகையில் ஸ்டார்ட்அப் பள்ளிகளை கூகுள் இந்தியா தொடங்கியுள்ளது.நாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 10,000 ஸ்டார்ட்அப்களுக்கு வழிகாட்டும் வகையில் ஸ்டார்ட் அப் பள்ளியை தொடங்கியிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஸ்டார்ட்அப் ஸ்கூல் என்பது, வளர்ந்து வரும் நிறுவனங்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கும். பயனுள்ள தயாரிப்பு உத்தியை வடிவமைப்பது, ரோட்மேப்பிங் மற்றும் தயாரிப்பு தேவைகள் தொடர்பான ஆவண மேம்பாடு போன்றவை குறித்த அறிவுறுத்தல் பாடத்திட்ட தொகுதிகளில் இடம்பெறும்.
9 வாரங்களை கொண்ட இந்த பயிற்சியில் ஈ-காமர்ஸ், சோஷியல் மீடியா, நெட்வொர்கிங் பிரிவில் இருக்கும் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு கூகுள் நிறுவன மூத்த ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் பயிற்சி வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here