2021- 22 நிதியாண்டில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்துள்ளது.
ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. அதில் 70 சதவீதம் தனியார் நிறுவனங்களில் இருந்தும், 30 சதவீதம் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்தும் ஏற்றுமதி ஆகியுள்ளது.
அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.
முக்கியமாக கடந்த ஜனவரி மாதம் ரூ.2,770 கோடி மதிப்பில் பிரமோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸ் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கும் ஏவுகணை ஏற்றுமதி செய்வதற்கு வழி வகுத்தது.