ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, கடந்த 30ம் தேதி அமர்நாத் யாத்திரை துவங்கியது. மலைப்பகுதியில் மேகவெடிப்பு காரணமாக கடும் மழை பெய்தது.மலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் டென்ட்டுகள் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றில் தங்கியிருந்த பக்தர்களும் வெள்ளத்தில் சிக்கினர்.வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.நேற்று வரை 16 உடல்கள் மீட்கப்-பட்டு உள்ளன. 15 ஆயிரம் பக்தர்கள் உயிருடன் மீட்கப்பட்டு ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தீவிரமக்க பட்டுள்ளது.