சிவகங்கை மாவட்டம் கீழடியில், தொடர் அகழாய்வுகள் நடந்து வருகின்றன. இங்கு, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.கி.மு., 6ம் நுாற்றாண்டில் வாழ்ந்த தமிழர்கள் கல்வி அறிவுடன் இருந்ததும், நகர கட்டமைப்புடன் வாழ்ந்ததும், இந்த அகழாய்வுகளின் வாயிலாக தெரிய வந்துள்ளது.இவ்வளவு சிறப்பு வாய்ந்த கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை, அதே இடத்தில் கள அருங்காட்சியகம் அமைத்து, அவற்றை காட்சிப்படுத்தும் வகையில், அரசு 12.21 கோடி ரூபாய் ஒதுக்கியது.கள அருங்காட்சியகம் அமைக்கும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டிஉள்ளது. அதன்பின், அங்கு தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.