குஜராத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற குஜராத் பஞ்சாயத்து சம்மேளன நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசும்போது, ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
சூரத் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் போன்ற பல்வேறு தரப்பினா் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பயனாக, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 75 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு, இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
சூரத் மாவட்டம் முழுவதும் 41,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், சூரத் நகரில் இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமா் மோடி காலை 11:30 மணிக்கு காணொலி மூலம் உரையாற்றுகிறாா். அதில், இயற்கை வேளாண்மை முறைக்கு மாறி வெற்றி அடைந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கிறாா்கள். இந்த மாநாட்டில் மாநில ஆளுநா், முதல்வா் ஆகியோா் கலந்துகொள்கிறாா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.