இந்தியா – சீனா இடையேயான எல்லை பகுதி, 3,400 கி.மீ., நீளம் உடையது. இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகளால் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, எல்லையோரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரிகளுக்கும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்களுக்கும், சீனாவின் மாண்டரின் மொழியில் பேசுவதற்கான பயிற்சியை அளிக்க, இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.