சிவயோக சுவாமி

0
87

மே 29, 1872 இல் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம்.

கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்க பாதிரிமாரின் நிறுவனமொன்றில் ஆரம்பக்கல்வியையும், பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலமும், தமிழும் படித்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராக அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார்.

தம்முடைய உத்தியோகக் கடமைகள் தவிர மரங்களை நடுவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் நட்டு பராமரித்த மாமரம் ஒன்று இன்றும் “சுவாமியார் மரம்” எனும் பெயருடன் கிளிநொச்சியில் உள்ளது.

1905 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் செல்லப்பா சுவாமியைக் கண்டதிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. வேலையை உதறிவிட்டு சாமியிடம் சரணடைந்தார்.

குரு தீட்சை பெற்று கொழும்புத்துறைக்குச் சென்று, அங்கு ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிறிது காலம் மோன சுகத்தில் திழைத்தார்.

இலங்கையின் அனைத்து பக்தர்களுக்கும் அருள் பாலித்து வந்தார்.
டிசம்பர் 1934 இல் சிவதொண்டன் என்ற பெயரில் ஒரு மாதாந்த சஞ்சிகையை ஆரம்பித்து நடத்தினார்.

1940 ஆம் ஆண்டில் யோகசுவாமி தல யாத்திரைக்காக இந்தியா வந்தார். காசி, சிதம்பரம் என்று பல இடங்களுக்கும் சென்றவர் ரமண மகரிஷியை அவரது அருணாச்சல ஆசிரமத்தில் சந்தித்தார்.

மார்ச் 1964ஆம் ஆண்டு யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் திருவடிக்கலப்புற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here