திரு. ஆர்.வரதராஜன் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அவர்களுடன் தொலைபேசி உரையாடலில் தமிழன் தற்சார்பு பொருளாதாரத்தின் முன்னோடி என்பதை தெரிந்து கொண்ட ஓர் கட்டுரை. திரு.ஆர். வரதராஜன் அவர்கள் பிறந்தது பர்மாவில் பூர்விகம் ராமநாதபுரம் மாவட்டம் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் வகையறாவை சேர்ந்தவர். அவர்கள் தந்தைக்கு பர்மாவில்வேலை கிடைத்ததால் 1946ல் பர்மாவிற்கு சென்றனர் தான் சிறுவயதில் வளர்ந்த பர்மா அனுபவத்தை பற்றி அவர் கூறுகிறார்
பர்மா இயற்கை வளம் மிகுந்த நாடு. அசாம் மாநிலம் சிரபுஞ்சி அருகில் இருப்பதால் வருடம் முழுவதும் நல்ல மழை பொழியும் நாடு. ஐராவதி என்ற நதியும் அதனுடைய கிளை நதிகளும் வற்றாத ஜிவநதியாக ஓடும் நாடு. மக்கள் தொகை அப்பொழுது சுமார் 2 கோடிக்கும் கீழ்தான் விவசாயம் பண்ணபட வேண்டிய ஆயிரக்கணக்கான நிலங்கள் எப்பொழுதுமே மழையில் ஈரமாய் இருக்கும். (18.06.1989 முதல் மியான்மர் குடியரசு என அழைக்கப்படுகிறது) அனால் அந்த நிலத்தில் விவசாயம் செய்ய
அப்போது எந்த பர்மியர்களும் தயாராக இல்லை.அன்றைய பர்மாவில் அதாவது 1937 ல் பிரிட்டிஸ்காரன் ஆண்ட பாரதத்தில் இருந்த பர்மா நாட்டினை தனியாக பிரித்து 04.01.1948ல் சுதந்திரம் அளித்துள்ளான். இயல்பில் பர்மாவில் அதிக அளவில் பெண்கள் உழைப்பவர்களாகவும் ஆண்கள் உழைப்பில் நாட்டம் இல்லாதவர்களாகவும் காலம் காலமாக இருந்து உள்ளனர். அதனால் வளம் மிக்க பர்மா பூமியில் விவசாயம் யாரும் செய்ய முன்வரவில்லை. எனவே பர்மாவில் செயல்பட்ட நமது “இந்திய தமிழர் அமைப்பினர்” அப்போதைய பர்மா பிரதமரிடம் சென்று பயனற்று கிடக்கும் நிலங்களில் நாங்கள் விவசாயம் செய்து அரசுக்கும்
எங்களுக்கும் பயனள்ளதாக நிலங்களை மாற்றி அமைக்கிறோம் என்று விண்ணப்பித்தனர். மனிதநேயமிக்கவரும் பர்மா வளர்ச்சியில் தொலைநோக்கு பார்வை கொண்ட பர்மா பிரதமர் அவர்கள் நம் தமிழர்கள் மேல் கொண்டிருந்த தற்சார்பு முறையையும் உழைப்பையும் நம்பி நிலங்களை சுமார் 4 ஏக்கர் 5 ஏக்கர் என்று பிரித்து கொடுத்து விவசாயத்தை ஊக்குவித்தார்.
ஏப்ரல் மே மாதங்களில் மட்டுமே மழை மிகவும் குறைவாக பெய்யும். ஏனைய மாதங்களில் அரசு தந்த நிலைத்தை உழுதுஇ வாய்க்கால் உருவாக்கி பெய்யும் மழைத் தண்ணீரை கொண்டு நம் தமிழ் பாரம்பரியபடி நெல் விதைத்து இரண்டு அல்லது மூன்று போக சாகுபடி செய்ததால் அரிசியின் வரவு பர்மாவில் செழித்தது. 1 படி ரூ1.50 க்கு அரிசி மக்களுக்கு கிடைத்ததால் பர்மா பிரதமர் மகிழ்ந்தார். நம் தமிழர்கள் ஆண்டுதோறும் விவசாயம் செய்யும் பகுதியை அதிகரித்ததால் நெல் விளைச்சல் அதிகமாகி அரிசியினை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததால் பர்மா அரசின் வருமானம் அதிகரித்தது. நம் தமிழர்களிடமும் செல்வம் குவியத்தொடங்கியது. பர்மா அரிசி என்றால் உலக வர்த்தகத்தில் உயர்ந்த இடம் பிடித்தது.
இரண்டாவதாக நம் தமிழர்களின் தற்சார்பு மற்றும் அறிவியல் பார்வை ஐராவதி நதியின் மீதும் அந்த கிளை நதிகளின் மீதும் விழுந்தது. பர்மாவில் வற்றாத ஜீவநதியில் எங்கு பார்த்தாலும் பல ஆண்டுகளாக பிடிக்கப்படாத மீன்கள் மிகப்பெரியதாகவும் கூட்டம் கூட்டமாகவும் தண்ணீருக்குள் நீந்திக் கொண்டிருந்தது. ஒரு சிலர் மட்டுமே தங்களின் உணவுக்காக தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த நம் தமிழர் அமைப்பு பர்மா பிரதமரிடம் எங்களுக்கு வங்கி கடனாக கப்பல், படகு போன்றவற்றை வாங்கித்தந்தால் நாங்கள் ஆற்றில் நிறைய மீன் பிடித்து மக்களுக்கு உணவாகவும் எங்களுக்கும் அரசுக்கும் வருமானமாகவும் பெருக்கிக் காட்டுகிறோம் என்றனர். தொலைநோக்கு பார்வை கொண்ட அன்றை பர்மா பிரதமர் அரசின் சார்பில் படகு கப்பல்களை வாங்கி நம் தமிழர் அமைப்பிடம் கொடுத்தார். நம் தமிழர்கள் கடுமையான உழைப்பின் மூலம் ஆற்றில் அதிகமான மீன்களை பிடித்தனர். பர்மாவின் அனைத்து மக்களுக்கும் நல்ல அரிசிக்கு பின் மீன்களும் நல்ல உணவாக கிடைத்தது. ஆற்றில்
அதிக எடையுள்ள மீன்கள் கிடைத்ததால் பர்மாவின் தேவைக்கும் அதிகமாக கிடைத்ததால் மீன்களை எப்படி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என முடிவெடுத்த தமிழர்கள் மீன்களாக ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக பாதுகாக்கப்பட்ட ருசியுள்ள மீன் குழம்பாக டின்களில் அடைத்து விற்க முடிவு செய்தார்கள். பர்மா அரசின் குழம்பு ஏற்றுமதிக்கு அனுமதி கிடைத்ததால் அரசுக்கும் மீன்பிடி தொழில் செய்த தமிழர்களுக்கும் நல்ல வருமானம் கிடைத்தது. வெளிநாடுகளில் தமிழர்கள் தயாரித்த மீன் குழம்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழர்கள் பலர் பர்மாவின் லட்சாதிபதிகளாக ஆனார்கள்.
மூன்றாவதாக தமிழர்களின் பார்வை பர்மா காடுகளை நோக்கியது. காடுகளில் சென்று பார்த்தால் சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தேக்கு மரங்கள் பாழ்பட்டு கிடந்தன. காடுகளின் நடுவே சிறிய ஓடையில் எப்பொழுதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
நம் தமிழர் அமைப்பு மீண்டும் பர்மா அதிபரிடம் காடுகளில் உள்ள சாய்ந்த தேக்கு மரங்களை வெட்டி வணிகம் செய்துஇ அதற்குப் பதிலாக ஒரு மரத்தை வெட்டினால் நான்கு தேக்கு மரக்கன்றுகளை நட்டு காடுகளை பராமரிக்கிறோம் ‘அனுமதி கொடுங்கள்’ என்று முறையிட்டனர். அப்பொழுதும் பர்மா பிரதமர் அவர்கள் இதனால் அரசுக்கும்இ தனி நபருக்கும் வருமானம் தானே என்ற எண்ணத்தில் தமிழர்களுக்கு அனுமதி அளித்தார். எண்ணற்ற தமிழர்கள் காடுகளில் வீட்டை அமைத்து தேக்கு மரத்தை வெட்டி வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் ‘பர்மா தேக்கு வணிகம் செய்து நல்ல பலன் அடைந்தனர். இதற்காக அப்போதைய இராமநாதபுரம், தஞ்சாவூர், சென்னை மண்ணடி போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மரம் வெட்டி பிழைக்கும் தொழிலுக்காக பர்மாவிற்கு குடும்பத்துடன் சென்றனர். ஏனெனில் 1960ல் இருந்து தமிழ்நாட்டிலும் பஞ்சம் தொடங்கியதால் பிழைப்பு தேடி தமிழர்கள் வெளிநாடு செல்ல தயாரான காலம் அது.
பர்மாவில் குடியேறிய தமிழர்கள் லட்சாதிபதிகளாக மாறினர். ஆனால் பர்மியர்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை.அனைத்து வர்த்தகங்களிலும் தமிழர்கள் முன்னிலையில் வகித்தனர். பர்மாவில் பௌத்த மதம் வளர்ந்து இருந்த காலம் அது. ஒரு சில இடங்களில் முனிஸ்வரன் கோயில் என்ற பெயரில் சிவன் கோவிலும் ஏனைய இந்து கோவிலும் இருந்துள்ளது.
நம் தமிழர்கள் வீடுகள் மாளிகைகள் ஆனது. பெண்கள் அதிகமாக நகைகளை வாங்கி மகிழ்ந்துள்ளனர்.
விடுமுறை நாட்களில் மிக உயரமான புத்தர் கோவிலுக்கு சென்று மெழுகு வர்த்தி ஏற்றி பர்மியர்களும் தமிழர்களும் வணங்கி வந்துள்ளனர். அவ்வாறு வழிபாட்டுக்குச் செல்லும் போது நம் தமிழ் பெண்கள் மிக அதிகமான நகைகளுடன் கோவிலுக்கு சென்று வந்துள்ளனர். ஆனால் பர்மிய பெண்கள் மட்டுமே உழைத்து வாழும் அந்நாட்டில் பர்மியர்களின் பொருளாதார முன்னேற்றம் எந்த வகையிலும் உயரவில்லை. இது நாளடைவில் நம் தமிழர்களின் மீது பர்மியர்களுக்கும் அந்நாட்டின் இராணுவத்திற்கும் பொறாமையை ஏற்படுத்தியது. ஜனநாயக முறைப்படி ஆட்சி நடந்த பர்மாவில் அப்போதைய பிரதமர் அவர்கள் எவர் மீதும் பேதைமை காட்ட விரும்பவில்லை. பிழைக்கவந்த தமிழர்கள் பர்மாவின் பொருளாதாரத்தையும் தொழில் வளர்ச்சியையும் தங்களின் தற்சார்பு முறையில் (Self – Reliant) உயர்த்தி காட்டியதை மட்டுமே பார்த்தார்.
1962 ல் திட்டமிட்ட இராணுவம் ஒரே நாளில் ஆட்சியை கைப்பற்றி பர்மாவில் பணமதிப்பிழப்பு என்றும் தமிழர்களும் ஏனைய இந்தியர்களும் தங்கள் நாட்டை விட்டு சுமார் 1500 ரூபாயும் பெண்கள் தங்களின் தாலியையும் மட்டும் வைத்துக் கொண்டு உடனடியாக கப்பல் அல்லது விமானம் மூலமும் வெளியேற வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.
பல ஆண்டுகளாக உழைத்த வீடு வயல் தங்க நகைகள் வியாபார நிறுவனங்கள் அனைத்தையும் இழந்து இந்தியா திரும்பினார்கள். ஏற்கெனவே பர்மாவில் சம்பாதித்து நம் இந்தியாவில் சொத்துகள் வாங்கியவர்களைத் தவிர மற்றவர்கள் பரம ஏழையாக இந்தியாவில் வாழ்ந்தனர். அவர்களை ‘பர்மா அகதிகள்’ என்று அழைக்கக் கூடாது ‘பர்மா தமிழர்கள்’ என்றே அழைக்க வேண்டும் என்று நம் தமிழர் அமைப்புகள் கூறிவந்தன. ஏனைய காட்சிகளை
பார்க்க;கலைஞர் அவர்கள் கதை வசனம் எழுதி ‘சிவாஜிகணேசன்’ அவர்கள் நடித்த பராசக்தி திரைப்படமே சாட்சி.
அவர்கள் வாழ்வை மேம்படுத்த அப்போதைய அரசாங்கம் ‘ பர்மா பஜார்’ போன்ற வியாபர பகுதிகளை உருவாக்கி அரசு வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நம் வெளிநாடு வாழ் தமிழர்கள் எங்கு சென்றாலும் தற்சார்பு முறையில் ( Self – Reliant ) பொருளாதாரத்தை உலகிற்கும் தங்களுக்கும் உயர்த்தி காட்டிய அடையாளமே எம் கட்டுரையின் நோக்கம்.
இன்றைய பாரதப் பிரதமர் அவர்களின் சுயசார்பு பாரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
14-7-2020 அன்பன் திருநெல்வேலி. ப. கோபால கிருஷ்ணன்
காவல் துறை கண்காணிப்பாளார்
(விரல் பதிவு)(ப.நி)
கைபேசி : 9442061565